“வினைத்தொகை” அறக்கட்டளை கல்வி, கலை, சர்வதேசச் சட்டம் ஆகிய புலங்களில் புதிய போக்குகளை ஊக்குவிக்கும் நோக்குடன் தொடங்கப்பட்டது.

இம்மூன்று புலங்களிலும் பின்வரும் வகைகளில் செயல்பட முனைந்துள்ளது:

 

புதிய தமிழ் ஆய்வுகள்

கல்வியாளர்களுடன் இணைந்து சமூக அறிவியல் துறைகளில் புதிய பார்வைகளுடன் கூடிய தரம் மிக்க ஆய்வுகளை ஊக்குவிக்கும் திசைகளில் செயல்படும். ஒடுக்கப்பட்ட – விலக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களின் முன்னேற்றத்திற்கு சிறப்பு முக்கியத்துவம், கல்விப் புல ஆய்வுகளின் வழி ஜனநாயக மற்றும் குடிமை நிறுவனங்களைப் பலப்படுத்துவது ஆகிய இலக்குகளுடன் செயல்பாடுகள் அமையும்.

பனித்திரை

கலை இலக்கியம் பிற படைப்புத் துறைகளில் சிறந்த ஆக்கங்களை ஊக்குவிக்கும் வகையில், குறிப்பாக ஒடுக்கப்பட்ட – விலக்கப்பட்ட சமூகங்களில் இருந்து வரும்  கூரிய நோக்குடைய கலைஞர்களுக்கு அணுக்கமாக செயல்பாடுகள் அமையும்.

சட்டமும் சமூக மாற்றமும்

உள்நாட்டுச் சட்டங்களுடன் தொடர்புடைய முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேசச் சட்டங்கள் குறித்த புரிந்துணர்வை உருவாக்கும் நோக்கில், சட்டத் துறையில் பணியாற்றுவோர், அரசு ஊழியர்கள் மற்றும் குடிமைச் சமூகத்தின் பரந்த பிரிவினரிடையே கலந்துரையாடல்களையும் பரிமாறல்களையும் நிகழ்த்தும் வகைகளில் செயல்பாடுகள் அமையும். “சட்டத்தின் ஆட்சி” என்படுவதில் “முறைசார் நிகழ்முறைகள்” பின்பற்றப்படுவதற்குரிய சூழல்களை உருவாக்கும் நோக்கோடும், ஜனநாயக அமைப்புகளை வலுப்படுத்தும் இலக்கோடும் இச்செயல்பாடுகள் அமையும்.

மேற்குறித்த இலக்குகளின் அடிப்படையிலேயே அறக்கட்டளையின் செயல்பாடுகள் அமைந்திருக்கும்.